/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
/
நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
ADDED : ஆக 29, 2024 12:07 AM
உடுமலை : மடத்துக்குளம் அருகே, நீர் வழித்தடம் மற்றும் குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா, மைவாடி கிராமத்தில், 17.59 ஏக்கர் பரப்பளவில் கருப்புசாமி புதுார் குளம் உள்ளது. சுற்றுப்புறத்திலுள்ள, 10 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக இருந்தது.
இக்குளத்தை சுற்றிலும் உள்ள, 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு கிணறு, போர்வெல் என நிலத்தடி நீர் ஆதாரமாகவும், குளத்திற்குள், 10 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பெரிய அளவிலான கிணறு உள்ளது.
சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழை நீர், பெரிய அளவிலான ஓடைகள் வழியாக வந்து, குளத்திற்குள் கலந்து வந்தது.
கடந்த, 20 ஆண்டுக்கு முன், கல் குவாரிகள் அமைக்கும்போது, குளத்தின் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, முற்றிலும் அழிக்கப்பட்டது. இதனால், குளம் வறண்டு, சுற்றுப்புற கிராமங்களில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
குளத்தின் நீர் வழித்தடங்கள் மற்றும் குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும், என விவசாயிகள் தரப்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது.
விவசாயிகள் தரப்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இது குறித்து தமிழக முதல்வருக்கு விவசாயிகள் மனு அனுப்பியுள்ள நிலையில், விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.