/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உற்பத்தி தொழிலில் ஆட்டோமேஷன் அவசியம்; சி.ஐ.ஐ., கருத்தரங்கில் வலியுறுத்தல்

ADDED : ஆக 06, 2024 11:07 PM
கோவை : கோவை இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், உற்பத்தி தொழிலில் ஆட்டோமேஷன் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கு, லீ மெரிடியன் ஓட்டலில் நேற்று நடந்தது.
துவக்க விழாவில், இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளையின் சார்பில், சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இந்திய அளவில் உற்பத்தி தொழிலில் வருங்காலத்தில், தவிர்க்க முடியாத ஒன்றாக ஆட்டோமேஷன் அவசியமாகி விடும். தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஓட்டல்களிலும் கூட ஆட்டேமேஷன் அடுத்த 10 ஆண்டுகளில் அவசியமாகி விடும்.
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு, தேவையானவற்றை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலத்தில், இயந்திரங்களின் தொழில்நுட்ப திறனும், செயல்திறனும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இயந்திரங்களை இயக்கும், மனித ஆற்றல் குறைந்து வருகிறது. இவற்றை ஈடுகட்ட ஆட்டோமேஷன் தேவை. ஆட்கள் பற்றாக்குறை, அவர்களுக்கான மேலாண்மை, அதிக சம்பளம், விடுமுறை போன்றவைகளால் உற்பத்தி பாதிப்பை தவிர்க்க வேண்டிய கட்டாயம் தொழிற்சாலைகளுக்கு உள்ளது.
உற்பத்தியை சீராக வைத்திருக்கவும், தேவையானபோது அதிகரிக்கவும், குறைக்கவும் வருங்காலத்தில் ஆட்டோமேஷன் அவசியம். இந்த வகையில், குறிப்பிட்ட தொழில் என்பது மட்டுமின்றி, தொழிற்சாலைகள், மருந்துகள் துறை, மருத்துவமனைகள், ஹோட்டல்கள் போன்ற சேவை தொழில் நிறுவனங்கள் போன்றவைகளில், தானியங்கி அவசியமான ஒன்றாக மாறி வருகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
சி.ஐ.ஐ., துணைத்தலைவர்கள் ஸ்ரீநாத், வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், தொழிற்சாலைகளில் ஆட்டோமேஷன் அவசியம் பற்றி, பல்வேறு துறையினர் பேசினர்.
இந்திய அளவில் உற்பத்தி தொழிலில் வருங்காலத்தில், தவிர்க்க முடியாத ஒன்றாக ஆட்டோமேஷன் அவசியமாகி விடும். தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஓட்டல்களிலும் கூட ஆட்டேமேஷன் அடுத்த 10 ஆண்டுகளில் அவசியமாகி விடும்.