/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் விளையாட்டு தின விழா; வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
கல்லுாரியில் விளையாட்டு தின விழா; வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
கல்லுாரியில் விளையாட்டு தின விழா; வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
கல்லுாரியில் விளையாட்டு தின விழா; வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : மே 05, 2024 11:17 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி, மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் விளையாட்டு தின விழா நடந்தது.
கல்லுாரி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு தின விழா நடந்தது.
விழாவில், எம்.சி.இ.டி., மாணவர் சேவை மன்றத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சுகந்த் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் தேவராஜன், விளையாட்டு தின அறிக்கையை படித்தார்.
கோவை மண்டல பிரிவில் உள்ள சர்வதேச தடகள வீரர் முகமது சலாவுதீன் பேசுகையில், ''மாணவர்கள் அதிகமாக சிந்திப்பதை விட்டுவிட்டு, எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்,'' என்றார்.
மாணவர் அசோக் லட்சுமணன், சிறந்த விளையாட்டு வீரர் விருதையும், மாணவி ஆதிவர்ஷி சிறந்த விளையாட்டு வீராங்கணை விருதையும் வென்றனர்.
அண்ணா பல்கலை மண்டலம் - 10 தடகளப்பிரிவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு, ஆறு தங்கபதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 11 வெண்கல பதக்கங்கள் பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை தென் மண்டல அகில இந்திய பல்கலைக்கழக குழுவின் கோ கோ போட்டியில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக மாணவி கோபிகாவுக்கு, கல்லுாரி நிர்வாகம் சார்பில், 5,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் ெஹனோ ஆண்டணி, சரவணன் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றனர்.
கோவை மண்டல தடகளப்பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஒரு தங்க பதக்கம், மூன்று வெள்ளி பதக்கங்கள், எட்டு வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, கல்வி நிறுவன முதல்வர்கள், பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.