/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
/
சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
ADDED : மார் 22, 2024 08:55 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில், லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுப்பதிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில், காஸ் சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டி, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி, நீலகிரி லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. லோக்சபா தேர்தலையொட்டி, மேட்டுப்பாளையத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தும் விதமாக தேர்தல் பிரிவு அதிகாரிகள், வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் --- கோத்தகிரி சாலை, ஓடந்துறை ரவுண்டானா பகுதியில் வீடுகளுக்கு விநியோகிக்கும் சமையல் காஸ் சிலிண்டர்களில், மாவட்ட வழங்கல் அதிகாரியும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரன், வட்ட வழங்கல் அதிகாரி சங்கர் லால் உள்ளிட்டோர், ஓட்டுப்பதிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று 100 சதவீதம் ஓட்டுப்பதிவை அதிகாரிகள் வலியுறுத்தினர்.---

