/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ சட்டம் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு
/
போக்சோ சட்டம் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு
ADDED : ஆக 28, 2024 02:04 AM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஸா கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறை மற்றும் எங்கள் துறை இணைந்து, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், போக்சோ சட்டம் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
விழிப்புணர்வின் போது, பள்ளிகள், பள்ளி செல்லும் வழிகள், டியூசன் படிக்கும் இடங்கள் என குழந்தைகள் செல்லும் இடங்களில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றி விளக்கப்பட்டது.
குற்றங்கள் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் பற்றியும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் 1098 மற்றும் போக்சோ சட்டம் குறித்தும், பள்ளி குழந்தைகளிடம் அறிவுரைகள் வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.--