/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசுபடும் அமராவதி ஆற்று நீர் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
/
மாசுபடும் அமராவதி ஆற்று நீர் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
மாசுபடும் அமராவதி ஆற்று நீர் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
மாசுபடும் அமராவதி ஆற்று நீர் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
ADDED : மே 01, 2024 11:08 PM
உடுமலை : மடத்துக்குளம் தாலுகா கொழுமம், கொமரலிங்கம் பகுதியில், அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. மேலும், கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி, ஆற்றில், சடங்குகள், செய்ய, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு, வருபவர்கள், ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசி விடுகின்றனர். இதனால், தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில், இத்தகைய கழிவுகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; ஆற்று நீரும் மாசுபடுகிறது. இதற்கு தீர்வாக, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில், ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து, அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.