/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு
/
புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு
புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு
புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு
ADDED : ஜூன் 01, 2024 11:41 PM

கோவை:புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், புகைப்பிடிப்பதை கைவிடு வதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய, 'டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனை தொகுப்பு' அறிமுகம் செய்யப்பட்டது.
இத்தொகுப்பை, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் குகன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.
டாக்டர் குகன் பேசுகையில், ''இந்த டிஜிட்டல் ஆடியோ தொகுப்பில், புகைப்பிடிப்பதால் ஒருவரின் உடல் நலம் எப்படி பாதிக்கப்படுகிறது, புகைப்பிடிப்பதை கைவிட என்ன வழி, கிடைக்கும் நன்மை குறித்த தகவல்கள், ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு வரும் நபர் கேட்டறிவது போல அமைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கலாம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

