ADDED : ஜூலை 15, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில் ஆ–குறுமைய செஸ் போட்டிகள் நேற்று துவங்கின. சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் போட்டிகளை துவக்கி வைத்தார். 11, 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கவின், ரிஷிக், கபில் சரண், மாணவியர் பிரிவில் ஜனனி, பியோனாஜாய், ஜோஷிகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் சாமுவேல், ஆசர்தரிண் அஸ்தி, ஸ்ரீசரண் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
