/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓடிக் குதிக்க பலுான் பங்களா எரிமலை; மிரட்டும் 12டி பஸ்! கிட்ஸ் ஜோனில் நான் ஸ்டாப் ஃபன்
/
ஓடிக் குதிக்க பலுான் பங்களா எரிமலை; மிரட்டும் 12டி பஸ்! கிட்ஸ் ஜோனில் நான் ஸ்டாப் ஃபன்
ஓடிக் குதிக்க பலுான் பங்களா எரிமலை; மிரட்டும் 12டி பஸ்! கிட்ஸ் ஜோனில் நான் ஸ்டாப் ஃபன்
ஓடிக் குதிக்க பலுான் பங்களா எரிமலை; மிரட்டும் 12டி பஸ்! கிட்ஸ் ஜோனில் நான் ஸ்டாப் ஃபன்
ADDED : ஆக 16, 2024 03:21 AM

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்-ல் குழந்தைகளுக்காகவே தனி விளையாட்டு உலகம் இருக்கிறது. ஓடிக் குதித்தால் என்னாகுமோ என்ற கவலையே வேண்டாம். பிரம்மாண்டமான பலுான் பங்களா அவர்களின் சேட்டையை ரசிப்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட கோட்டை போலிருக்கும் பன் சிட்டியில் ஏறிச் சறுக்கி, குதித்து விளையாடலாம்.
பாடப்புத்தகங்களில் மட்டுமே படித்த பாலைவனக் கப்பலில்... அதாங்க ஒட்டகத்தில் ஏறி உலா வரலாம். அதனுடன் செல்பியும் எடுத்துக் கொள்ளலாம். நான் பெரியவனானதும் போலீஸ் ஆகி, திருடங்களை விரட்டி விரட்டிப் பிடிப்பேன் எனக் கூறுகிறாரா உங்கள் செல்லம்.
எலக்ட்ரிக் பைக்கில் போலீஸைப் போல வேகமாக அவர் ஓட்டிச் செல்லலாம். விதவிதமான வடிவங்களில் எலெக்ட்ரிக் பைக் இருக்கிறது. எங்களின் செல்லம் இன்னும் பொடிசு. தனியாக வண்டி ஓட்ட மாட்டார் என்கிறீர்களா. அவர்களுக்காக எலக்ட்ரிக் டிரெய்ன் இருக்கிறது.
நாங்கள்லாம் அசல் ஜல்லிக்கட்டிலேயே மல்லுக்கட்டுவோம். இதென்ன பிரமாதம். வீர விளையட்டு எதுவும் இல்லையா எனக் கேட்பவர்களுக்காக புல் ரைடு இருக்கிறது. காளை மீது ஏறி, அதன் குதியாட்டத்தை அடக்குங்க குட்டீஸ்.
குட்டீஸ்களுக்காகவே குதித்து விளையாட டிரம்போலின், வாட்டர் போட், வாட்டர் ரோலர், ஷார்க் கேம்ஸ், பன் சிட்டி டக்ஸ் என விதவிதமான விளையாட்டுகள் உள்ளன.
புத்தம் புது வரவாக காத்திருக்கிறது 12டி பஸ்! இதற்காகவே வரவழைக்கப்பட்டிருக்கிறது பிரத்யேக பஸ். இதற்குள் 9 பேர் அமரலாம். ஸ்பெஷல் கண்ணாடி அணிந்ததும் காத்திருக்கிறது மிரட்டலான பயணம்.
ரோலர் கோஸ்டராக துவங்கும் இந்தப் பயணத்தை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுமே ரசிக்கலாம்.
இது வேற மாதிரி அனுபவமாக இருக்கும். பாலைவனத்தில் பயணிக்கும் ரோலர் கோஸ்டர் நாமே பாலைவனத்துக்குள் இருப்பது போன்ற அனுபவத்தைத் தரும். பாலைவனத்தின் அடியில் செல்வது, ரயில்கள் மோதி, அதிலிருந்து பொருட்கள் சிதறுவது, எரிமலைக் குழம்புகள் பறக்க அதனூடே செல்வது, தீம் பார்க்குகளில் ரோலர் கோஸ்டரில் செல்வது போன்ற அனுபவம் என ஆறு நிமிடம் வரை அசத்தலான அனுபவம் காத்திருக்கிறது.
உங்கள் குட்டீஸின் குதுாகலத்துக்கு நாங்கள் கேரண்டி!

