/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் உள்ளூர் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
/
வாழைத்தார் உள்ளூர் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
ADDED : ஆக 29, 2024 10:03 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், உள்ளூர் வாழைத்தார் வரத்து அதிகரித்ததால், விலை சரிந்துள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும், விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். மார்க்கெட்டிற்கு கேரள மாநில வியாபாரிகள் வருகை இருப்பதால், வாழைத்தாருக்கு நல்ல விலை கிடைக்கிறது.
மார்கெட்டில் உள்ளூர் வாழைத்தார் வரத்து காரணமாக, விலை சரிந்துள்ளது. தற்போது செவ்வாழை கிலோ - 60, நேந்திரன் - 50, பூவன் - 43, சாம்பிராணி - 40, கதளி - 40, ரஸ்தாளி -- 35 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், நேந்திரன், ரஸ்தாளி - 5, செவ்வாழை, கதளி - 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. பூவன் - 3 மற்றும் சாம்பிராணி வகை - 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.