/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.17 கோடி அடகு நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளருக்கு வலை
/
ரூ.17 கோடி அடகு நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளருக்கு வலை
ரூ.17 கோடி அடகு நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளருக்கு வலை
ரூ.17 கோடி அடகு நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளருக்கு வலை
ADDED : ஆக 18, 2024 12:54 AM

பாலக்காடு:கேரளாவில், பாங்க் ஆப் மஹாராஷ்டிராவில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த, 17.20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26.24 கிலோ தங்க நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளரை போலீசார் தேடுகின்றனர்.
தமிழகத்தில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக் குமார், 34. இவர், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை எடோடி பகுதி பாங்க் ஆப் மஹாராஷ்டிராவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், எர்ணாகுளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் பொறுப்பேற்காமல் இருந்ததாலும், வங்கி நிர்வாகத்துடன் தொடர்பில் இல்லாததாலும், உயர் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, வடகரை எடோடி கிளை வங்கியில் ஆய்வு செய்ததில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளுடன் மேலாளர் தலைமறைவானது உறுதி செய்யப்பட்டது.
வங்கி உயர் அதிகாரிகள் வடகரை போலீசில் கொடுத்த புகாரில், 'வங்கியில், ஜூன் 13 முதல் ஜூலை 6 வரை, 42 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த, 26 கிலோ 244.20 கிராம் எடை உடைய, 17.20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மேலாளர் எடுத்துள்ளார்.
அதற்கு மாற்றாக போலி நகைகளை லாக்கரில் வைத்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடித்து, கையாடல் செய்த நகைகளை மீட்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகரை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசார் கூறு கையில், 'ஆக., 13 வரை மேலாளர் மதா ஜெயக்குமாரின் மொபைல்போன் செயல்பாட்டில் இருந்துள்ளது. அதற்கு பின், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.
வங்கி லாக்கரில் இருக்கும் நகையை எடுத்துக் கொண்டு, அதற்கு மாற்றாக போலி நகையை லாக்கரில் வைத்துள்ளார். தனி நபரால் இதை செய்திருக்க முடியாது.
வங்கியில் பணியாற்றும் மற்றவர்களிடமும் விசாரணை நடக்கிறது. 'சிசிடிவி' வீடியோ காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடக்கிறது' என்றனர்.