/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வங்கிகளில் பணிப்பளு அதிகம்; ஊழியர் எண்ணிக்கை குறைவு'
/
'வங்கிகளில் பணிப்பளு அதிகம்; ஊழியர் எண்ணிக்கை குறைவு'
'வங்கிகளில் பணிப்பளு அதிகம்; ஊழியர் எண்ணிக்கை குறைவு'
'வங்கிகளில் பணிப்பளு அதிகம்; ஊழியர் எண்ணிக்கை குறைவு'
ADDED : பிப் 15, 2025 07:29 AM

கோவை; அகில இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செஞ்சிலுவை சங்கம் எதிரில் உள்ள, கனரா வங்கி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகள் குறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் மகேஸ்வரன் கூறியதாவது:
இந்தியாவில் வங்கி ஊழியர் நியமனம், குறைந்து கொண்டே இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில், 65 ஆயிரம் வங்கி ஊழியர்கள் குறைந்துள்ளனர்.பொதுவாக வங்கிகளில், 60 சதவீதம் ஊழியர்களும், 40 சதவீதம் அதிகாரிகளும் இருப்பது வழக்கம். ஆனால் இப்போது, ஊழியர்கள் சதவீதம்தான் உள்ளனர்.
ஆனால் வங்கிகளின் வணிகம் மற்றும் லாபம் அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்களின் வேலை சுமை அதிகரித்துள்ளது. சேவை குறைபாடு ஏற்படும் போது ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது.
அனைத்து மத்திய, மாநில அரசு பணியாளர்களையும் போல், வங்கி ஊழியர்களுக்கும் ஐந்து நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24,25 தேதிகளில் வேலை நிறுத்தம் நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.