/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரான்ஸ்பார்மர் அருகே தடுப்பு அமைக்கணும்!
/
டிரான்ஸ்பார்மர் அருகே தடுப்பு அமைக்கணும்!
ADDED : ஆக 27, 2024 02:09 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு, அண்ணாநகரில் உள்ள விநாயகர் கோவில் அருகே, குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் உள்ள குழந்தைகள் ரோட்டில் விளையாடுகின்றனர்.
குடியிருப்பு அருகே டிரான்ஸ்பார்மர் இருப்பதால், குழந்தைகளை வெளியில் அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த டிரான்ஸ்பார்மருக்கும் வீடுகளுக்கும் இடையே, 20 முதல் 30 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது.
மேலும், இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் தனியார் கல்யாண மண்டபம் உள்ளது. விசேஷ நேரத்தில் இந்த டிரான்ஸ்பார்மர் அருகே அதிக வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது.
எனவே, அப்பகுதி மக்கள் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் தடுப்புகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

