ADDED : பிப் 21, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெண்களுக்காக மட்டும் அரசு சான்றிதழ் உடன் கூடிய அழகு கலை இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாதம், 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர வயது வரம்பு, 18 முதல், 45 வரை. பயிற்சி வகுப்புகள் தினமும் காலை, 9:30 மணி முதல் 5:30 மணி வரை நடக்கும். கோவை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்க இயலும்.
மேலும், விபரங்களுக்கு கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், புதுப்புதுார், பெரியநாயக்கன்பாளையம், கோவை--20 மொபைல் எண், 94890 43926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.