/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி
/
வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி
ADDED : ஆக 03, 2024 09:51 PM
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பில் மாதம் தோறும், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆக., மாதத்திற்கான பயிற்சி, 6ம் தேதி நடக்கிறது.
இதில், தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விபரம், தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், பயிற்சி நாளன்று காலை 9:00 மணியளவில் 590 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். அடையாளம் சான்று சமர்ப்பித்து பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.