ADDED : ஆக 03, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, புளியம்பட்டி பி.ஏ., பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
பி.ஏ., கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் லட்சுமி, பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு, அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் யுவராஜா ஆகியோர் விழாவைத் துவக்கி வைத்தனர். மாணவி நாகாஅன்னபூரணி வரவேற்றார்.
பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் கல்வி கற்பதுடன் ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டும். வேலை தேடுவதைவிட, பிறருக்கு வேலை கொடுப்பவர்களாக திகழ வேண்டும்,'' என்றார்.