/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணியிடத்தில் நுரையீரல் புற்றுநோய் அபாயம் விழிப்புடன் இருந்தால் வீண் தொந்தரவு தவிர்க்கலாம்
/
பணியிடத்தில் நுரையீரல் புற்றுநோய் அபாயம் விழிப்புடன் இருந்தால் வீண் தொந்தரவு தவிர்க்கலாம்
பணியிடத்தில் நுரையீரல் புற்றுநோய் அபாயம் விழிப்புடன் இருந்தால் வீண் தொந்தரவு தவிர்க்கலாம்
பணியிடத்தில் நுரையீரல் புற்றுநோய் அபாயம் விழிப்புடன் இருந்தால் வீண் தொந்தரவு தவிர்க்கலாம்
ADDED : மார் 08, 2025 11:35 PM

'எங்க அப்பா பீடி, சிகரெட் எதுவும் குடிக்க மாட்டாருங்க, அவருக்கு எப்படி நுரையீரல் புற்றுநோய் வந்துச்சுன்னே தெரியலைங்க'
- சமீபத்தில் அரசு மருத்துவமனையில் அழுது கொண்டு இருந்த பெண்ணை பார்த்தோம். அவர் கூறியது குறித்து, டாக்டரிடம் விசாரித்தபோதுதான், ஆஸ்பெட்டாஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக அவரது தந்தை பணிபுரிந்து இருப்பது தெரியவந்தது.
இது போல், பணியிடங்களால் உருவாகும் நுரையீரல் பாதிப்புகள், பலருக்கு புற்றுநோய் வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சமையல், கட்டட வேலை, பெயின்ட், பவுண்டரி, பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலைகள், அனைத்து வித கெமிக்கல் தொழிற்சாலைகள், ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள், குவாரிகள், என பல துாசு, புகை உள்ள இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களாக இருப்பின், உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார், அரசு மருத்துவமனை நுரையீரல் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் கீர்த்திவாசன்.
அவர் கூறியதாவது:
எந்த வேலையில் துாசு, புகை தொடர்ந்து உள்ளதோ, அங்கு நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு சி.ஓ.பி.டி., எனும் நாள்பட்ட மூச்சு அடைப்பு பாதிப்பு ஏற்படலாம். தொடர்ந்து இதை சுவாசிப்பதால், நுரையீரலின் செயல்படும் தன்மை குறைந்துவிடும்.
ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கா, கெமிக்கல், பிளாஸ்டிக் உருக்குதல் சார்ந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற இடங்களில் பணியாளர்கள், 'இன்டஸ்ட்ரீயல் கிரேடு மாஸ்க்' கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும். சாதாரண மாஸ்க் பயன் தராது. பணிபுரியும் இடம் காற்றோட்டத்துடன் இருந்தால், பாதிப்புகள் குறைய வாய்ப்புண்டு.
இவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை எக்ஸ்ரே, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொழிற்சாலை உரிமையாளர்கள் இதற்கு கட்டாயம் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
இதுபோன்ற அபாயகரமான பணியில் இருப்பவர்கள், இயல்பாக நடப்பதில் சிரமம், மாடிப்படி ஏறுவதில் சிரமங்கள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சமீபத்தில் கோவையில் உள்ள ஒரு குவாரியில், பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ததில், இருவருக்கு நுரையீல் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சமையல், கட்டட வேலை, பெயின்ட், பவுண்டரி, பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலைகள், அனைத்து வித கெமிக்கல் தொழிற்சாலைகள், ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள், குவாரிகள், என பல துாசு, புகை உள்ள இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களாக இருப்பின், உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது