ADDED : ஜூலை 27, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பீகார் வாலிபரை கத்தியால் குத்திய இன்னொரு பீகார் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பீகாரை சேர்ந்தவர் தீபக்குமார்,25. இவர் கடந்த, 19ம் தேதி கோவை கவுண்டம்பாளையம் வந்தார். பீகாரரை சேர்ந்த குணாளனுடன், ஒரே அறையில் தங்கியுள்ளனர். 25ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சமாதானமாகினர். நள்ளிரவில் குணாளன், தீபக் குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். காயமைடைந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவுண்டம்பாளையம் போலீசார், குணாளனை தேடி வருகின்றனர்.
