/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு முன் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு
/
வீடு முன் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு
ADDED : மார் 06, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுரிசங்கர், 43, மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் விஷ்ணுவை சந்திக்க, கிணத்துக்கடவு அரசம்பாளையத்திற்கு பைக்கில் (ஸ்ப்ளெண்டர்) வந்தார்.
இரவில் வீட்டின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு, உறங்கச்சென்றார். அதிகாலையில் வீட்டின் வெளியே பார்த்த போது, நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது. இது தொடர்பாக, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.