/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காணும் இடமெல்லாம் விளம்பர பலகை! பஸ் ஸ்டாண்டில் அத்துமீறலால் அபாயம்
/
காணும் இடமெல்லாம் விளம்பர பலகை! பஸ் ஸ்டாண்டில் அத்துமீறலால் அபாயம்
காணும் இடமெல்லாம் விளம்பர பலகை! பஸ் ஸ்டாண்டில் அத்துமீறலால் அபாயம்
காணும் இடமெல்லாம் விளம்பர பலகை! பஸ் ஸ்டாண்டில் அத்துமீறலால் அபாயம்
ADDED : மே 27, 2024 11:42 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், விளம்பர பிளக்ஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொது இடம் மற்றும் தனியார் கட்டடங்களில், அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. அதில், பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டின் மேற்பகுதியில், அதிகளவு விளம்பர பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
இரும்பு பிரேம்களுடன் வைக்கப்படும் இந்த விளம்பர பிளக்ஸ்களால், விபத்து அபாயம் உள்ளது. பயணியர் அச்சத்துடன் காத்திருக்கும் சூழல் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புது பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள, விளம்பர பலகையால் வாகன ஓட்டுநர்களின் கவனம் சிதறும். மேலும், விளம்பர பிளக்ஸ்களால் விபத்து அபாயம் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன், மும்பையில் விளம்பர பிளக்ஸ் சரிந்து, 14 பேர் இறந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற, அசம்பாவிதங்கள் நடந்த பின்னரும், பொள்ளாச்சி நகராட்சி புது பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்கள் அகற்றப்படாமல் உள்ளன.
தற்போது, மழைப்பொழிவுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது. காற்றுக்கு தாங்காமல் இரும்பு பிரேம்களுடன் பிளக்ஸ்கள் கீழே விழுந்தால் பயணியர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பஸ் ஸ்டாண்டுக்கு வருவோரின் பாதுகாப்பினை உறுதி செய்திட, அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பிளக்ஸ்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன், இவற்றை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
தற்போது, தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், அரசியல் கட்சிகளின் பிளக்ஸ்களை காண முடிவதில்லை. மாறாக, வர்த்தக ரீதியான தனியார் நிறுவன பிளஸ்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை, கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.