ADDED : ஜூலை 26, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: உயிர்க்கரி தயாரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் தொடர்பான பயிற்சி, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவு சார்பில், வரும் 30ம் தேதி நடக்கிறது.
உணவு மற்றும் விவசாயக் கழிவுகளை உரமாக மாற்றும் உயிர்க்கரி தயாரிக்கும் அறிவியல் முறைகள், பயன்பாடுகள், உற்பத்தி மையம் அமைக்கும் முறைகள், மதிப்புக்கூட்டல், தொழில் தொடங்கும் வழிமுறைகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பாக, வனக்கல்லுாரியில் உள்ள உயிர்க்கரி உற்பத்தி மையத்துக்கு, பயிற்சியில் பங்கேற்பவர்கள் அழைத்து செல்லப்பட்டு செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. விபரங்களுக்கு: 7418470345, 9487712210.
----
