/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைரசும் வெயிலும் தாக்கி கருகுது பீர்க்கங்காய் கொடி
/
வைரசும் வெயிலும் தாக்கி கருகுது பீர்க்கங்காய் கொடி
வைரசும் வெயிலும் தாக்கி கருகுது பீர்க்கங்காய் கொடி
வைரசும் வெயிலும் தாக்கி கருகுது பீர்க்கங்காய் கொடி
ADDED : மே 01, 2024 11:25 PM

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மழை பொழிவு இல்லாததாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பயிர்கள் நோய் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், வெள்ளிமலைபட்டிணத்தில், பீர்க்கங்காய் கொடியில், வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு, இலை சுருள் மற்றும் கொடி கருகியுள்ளன.
தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'வழக்கம் போல சித்திரை மாதம் மழை பெய்யும் என்ற நம்பி, பங்குனியில், பீர்க்கங்காய் நடவு செய்தோம்.
வழக்கமாக, 45 நாட்களில், 10 முறை காய்களை பறிப்போம். ஆனால், இந்தாண்டு மழை பொய்த்துப்போனதாலும், வெயிலும் அதிகரித்ததாலும், கொடியில் வைரஸ் நோய் தாக்கி, இலை சுருண்டு, கொடி மற்றும் காய் முழுவதும் கருகி விட்டது' என்றனர்.