sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மலரும் நினைவுகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல; தொழிலாளர்களுக்கும் தான்! 23 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தனர்

/

மலரும் நினைவுகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல; தொழிலாளர்களுக்கும் தான்! 23 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தனர்

மலரும் நினைவுகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல; தொழிலாளர்களுக்கும் தான்! 23 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தனர்

மலரும் நினைவுகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல; தொழிலாளர்களுக்கும் தான்! 23 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தனர்


ADDED : மே 05, 2024 12:15 AM

Google News

ADDED : மே 05, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி, பள்ளிகளில் ஒன்றாக படித்த மாணவர்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள். நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு சென்றால் மீண்டும் சந்திப்பது அரிதாகும். ஆனால் மூடப்பட்ட நிறுவனத்தில் இருந்து பிரிந்து சென்ற, 160 ஊழியர்கள், 23 வருடங்களுக்கு பின் ஒரே இடத்தில் சந்தித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை, கணபதியில் சுமார், 75 வருடங்களுக்கு முன் துவங்கி பிரபலமாக செயல்பட்டு வந்த டெக்ஸ்டூல் நிறுவனம் கடந்த, 2001ம் ஆண்டு தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. பணியாற்றிய ஊழியர்கள் அதன் பின் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இந்நிலையில் மே, 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ஒரே இடத்தில் அனைவரும் சந்திக்க திட்டமிட்டனர்.

அங்கு பணியாற்றிய சில ஊழியர்கள் ஒன்று கூடி அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு மே தினத்தன்று கோவை சரவணம்பட்டியில் உள்ள ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். இதை தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், தொழிலாளர் என அனைவரும் வேறுபாடு பார்க்காமல் ஒரே சீருடை அணிந்து ஒன்றாக கூடினர்.

அப்போது பணி அனுபவத்தை, நட்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். 45 வயது முதல், 85 வரை வயதான ஊழியர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மே தின நாளை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் சிம்பொனி மெல்லிசை, கலை நிகழ்ச்சி, சிறப்பு உணவு என களைகட்டியது.






      Dinamalar
      Follow us