/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் கால்பதிக்கும் 'புளூயாண்டர்' நிறுவனம்
/
கோவையில் கால்பதிக்கும் 'புளூயாண்டர்' நிறுவனம்
ADDED : ஆக 15, 2024 03:22 AM
கோவை : புளூயாண்டர் என்பது, அமெரிக்காவை சேர்ந்த வினியோகச்சங்கிலி (சப்ளை செயின்) மேலாண்மை நிறுவனம். இது பேனாசோனிக் நிறுவனத்தின் துணை நிறுவனம். மென்பொருள் உருவாக்கம், விநியோக சங்கிலி மேலாண்மைப்பணிகளையும், சரக்கு போக்குவரத்தையும் (லாஜிஸ்டிக்) கையாள்கிறது.
இந்நிறுவனம் கோவையில் உற்பத்தியாகும் இயந்திரங்கள், மோட்டார்கள், பம்ப்செட்கள், ஜவுளித்துறை உதிரிபாகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கையாள திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், காளப்பட்டியிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அமைய உள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்.
இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளை முன்னாள் தலைவர் பிரசாந்த் கூறுகையில், ''தற்போது பல மென்பொருள் நிறுவனங்கள், கோவையில் கால்பதிக்க காத்திருக்கின்றன. அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள், அதிகரித்துள்ளதால் சர்வதேச அளவில் ஏராளமான நிறுவனங்கள், கோவையில் துவங்குவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி வருகின்றன,'' என்றார்.