/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிசியாவில் புத்தக கண்காட்சி; குழந்தைகள் புத்தகம் அதிக விற்பனை
/
கொடிசியாவில் புத்தக கண்காட்சி; குழந்தைகள் புத்தகம் அதிக விற்பனை
கொடிசியாவில் புத்தக கண்காட்சி; குழந்தைகள் புத்தகம் அதிக விற்பனை
கொடிசியாவில் புத்தக கண்காட்சி; குழந்தைகள் புத்தகம் அதிக விற்பனை
ADDED : ஜூலை 24, 2024 11:50 PM

கோவை : கோவை புத்தக கண்காட்சியில், குழந்தைகளுக்கான புத்தகங்களை பெற்றோர் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா, கொடிசியா வணிக வளாகத்தில் நடந்து வருகிறது. 280க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், பல லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வாசகர்கள், பொதுமக்கள் தினமும் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தகங்களை, பெற்றோர் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். பல்வேறு நாடுகளின் வரைபடங்கள் அதிகம் விற்பனையாகின்றன.
தினமும் இலக்கிய நிகழ்ச்சிகள்
கண்காட்சி அரங்கில் தினமும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிவுக்கேணி அமைப்பு சார்பில் 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச்சுப்போட்டி நடந்தது. இதில் கோவையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 75 மாணவர்கள் பங்கேற்றனர்.
சச்சிதானந்த நிகேதன் பன்னாட்டு பள்ளி மாணவர் அகில் முதல் பரிசும், ஸ்ரீமதி பத்மாவதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சஞ்சிதா இரண்டாம் பரிசும், சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி மூன்றாம் பரிசும் பெற்றனர்.
ஆங்கில பேச்சு போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்.,கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி பிரக்ஞா முதல் பரிசும், டாக்டர் கெங்குசாமி நாயுடு பள்ளி மாணவர் கவியரசு இரண்டாம் பரிசும், ஜெய் கார்த்திக், ஹன்னா யாசர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.