/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சள் நிறத்தில் வந்த போர்வெல் தண்ணீர்
/
மஞ்சள் நிறத்தில் வந்த போர்வெல் தண்ணீர்
ADDED : மார் 02, 2025 04:58 AM

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கு அருகே உள்ள ஸ்ரீராம் நகரில், போர்வெல் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்தது.
கோவை நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பை வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. அதன் காரணமாக சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசடைந்திருக்கிறது. குப்பை கிடங்கு அருகே உள்ள கோணவாய்க்கால்பாளையம், கல்லறை சேரி, இந்திரா நகர், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், அருள் முருகன் நகர், மகாலிங்கபுரம், கஞ்சிகோணாம்பாளையம், கம்பர் வீதி உள்ளிட்ட பகுதிகள் வசிக்க முடியாத நிலைக்கு மாறியுள்ளன.
இப்பகுதியில் போடப்பட்டுள்ள போர்வெல்களில், தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதற்கு முன், மஞ்சள் நிறம் லேசாக இருந்தது; தற்போது மிகவும் அடர்த்தியாக காணப்படுவதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். வாரிய அதிகாரிகள் நேரில் வந்து, ஸ்ரீராம் நகரில் உள்ள வீடுகளுக்குச் சென்று, போர்வெல் இயக்கிப் பார்த்தனர்.
தண்ணீரை ஆய்வுக்காக ஒரு கேனில் பிடித்துச் சென்றனர். ஆய்வறிக்கை வந்த பிறகே தண்ணீரை பயன்படுத்தலாமா, பயன்படுத்தக் கூடாதா என்கிற விபரம் தெரியவரும்.