/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம்; தேரோட்டத்தில் பக்தர்கள் வழிபாடு
/
பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம்; தேரோட்டத்தில் பக்தர்கள் வழிபாடு
பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம்; தேரோட்டத்தில் பக்தர்கள் வழிபாடு
பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம்; தேரோட்டத்தில் பக்தர்கள் வழிபாடு
ADDED : ஏப் 23, 2024 10:04 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பிரமோத்ஸவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 48வது ஆண்டு பிரமோத்ஸவ விழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், நேற்று வரை தினமும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடந்த, 21ம் தேதி கரிவரதராஜப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் தேரில் தாயாருடன், பெருமாள் ஏளப்பண்ணுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தேர் வடம் பிடிக்கப்பட்டு கோவில் முன் நிலை நிறுத்தப்பட்டது. திரளான பக்தர்கள், பெருமாளை தரிசனம் செய்தனர்.
அதன்பின், மாலை, 6:00 மணிக்கு தேரில் சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு தாயாருடன் பெருமாள் அருள்பாலித்தார்.
இன்று காலை, 6:00 மணிக்கு தீர்த்தவாரி, மாலை, 3:00 மணிக்கு துவாதச ஆராதனம் கண்டருலுதல், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதி உலா நடக்கிறது. நாளை (25ம் தேதி) காலை 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன், பிரமோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது.

