/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.கம்யூ., சார்பில் சட்ட நகல் எரிப்பு
/
இ.கம்யூ., சார்பில் சட்ட நகல் எரிப்பு
ADDED : ஆக 10, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:இ.கம்யூ., கட்சி சார்பில், சட்ட நகல் எரிப்பு போராட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடந்தது. போலீசார் அவற்றை பறித்துச் சென்றனர்.
கட்சியின் மாநிலப் பொருளாளர் ஆறுமுகம் பேசுகையில், ''புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள், நீதி மன்றங்களுக்கு உள்ள அதிகாரங்களை பறித்து, போலீசாரிடம் கொடுத்துள்ளது. மாநில அரசுக்கு இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
''இத்திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்,'' என்றார்.
போராட்டத்தில் இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜேம்ஸ், குணசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.