/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்கள் நேருக்குநேர் மோதல்; காயமின்றி தப்பினர் பயணியர்
/
பஸ்கள் நேருக்குநேர் மோதல்; காயமின்றி தப்பினர் பயணியர்
பஸ்கள் நேருக்குநேர் மோதல்; காயமின்றி தப்பினர் பயணியர்
பஸ்கள் நேருக்குநேர் மோதல்; காயமின்றி தப்பினர் பயணியர்
ADDED : ஆக 21, 2024 11:56 PM

ஆனைமலை: ஆனைமலை அருகே, இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது. அதிர்ஷ்டவசமாக பயணியர் காயமின்றி தப்பினர்.
ஆனைமலை அருகே, ஒடையகுளம் பகுதியில் நேற்று காலை பயணியரை ஏற்றிக்கொண்டு, அரசு பஸ் (வழித்தட எண்:12) பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஆனைமலை - பொள்ளாச்சி ரோடு சுந்தரபுரி அருகே வந்த டவுன் பஸ்சும், எதிரே திருப்பூரில் இருந்து வந்த அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
பஸ் மோதிய சம்பவத்தை அவ்வழியாக கண்டோர், பெரும் விபத்து ஏற்பட்டதாக கருதி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஆனைமலை போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு பஸ்சில் இருந்த பயணியருக்கு எவ்வித காயமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். டவுன் பஸ் ஓட்டி வந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரகு,35, திருப்பூர் பஸ் ஓட்டுநர் ஈரோடு அந்தியூரை சேர்ந்த சக்திகுமார்,35, ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், விபத்தில் சிக்கிய பஸ்களை போலீசார் ஓரமாக ஒதுக்கி நிறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.