/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலார் உலர் களத்தை பயன்படுத்த அழைப்பு
/
சோலார் உலர் களத்தை பயன்படுத்த அழைப்பு
ADDED : பிப் 28, 2025 10:42 PM
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சோலார் உலர் களம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோலார் உலர்களத்தில், 2 ஆயிரம் தேங்காய்க்கு அதிகமாக உலர வைக்க முடியும். தேங்காயை உலர வைக்க பணியாட்கள் நியமித்து செலவு செய்வதை காட்டிலும் இது சிறந்ததாக இருக்கும்.
தேங்காய்களை உலர வைக்க, 'சல்பர்' போன்ற ரசாயனம் உபயோகப்படுத்தாமல் இந்த சோலார் உலர் களம் வாயிலாக எளிமையாக உலர வைக்க முடியும்.
விற்பனை கூடத்தில், கடந்த மாதம், 96 விவசாயிகள் கொப்பரை இருப்பு வைத்தனர். அப்போது கொப்பரை கிலோவுக்கு, 95 முதல் 110 ரூபாய் வரை விலை இருந்தது. தற்போது, 80 விவசாயிகள், கொப்பரை கிலோ, 140 முதல் 145 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் விலை ஏற்றத்திற்காக கிடங்கில் இருப்பு வைத்துள்ளனர். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.