/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவிர வைப்பு சேகரிப்பு முகாம் மக்கள் பயன்படுத்த அழைப்பு
/
தீவிர வைப்பு சேகரிப்பு முகாம் மக்கள் பயன்படுத்த அழைப்பு
தீவிர வைப்பு சேகரிப்பு முகாம் மக்கள் பயன்படுத்த அழைப்பு
தீவிர வைப்பு சேகரிப்பு முகாம் மக்கள் பயன்படுத்த அழைப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:43 PM
பொள்ளாச்சி;கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளில், தீவிர வைப்பு சேகரிப்பு முகாம் மற்றும் கடன் மேளா நடக்கிறது.இதை பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கீழ், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்,39 கிளைகள் செயல்படுகின்றன. இவற்றில்இன்று,29ம் தேதி வரை, தீவிர வைப்பு சேகரிப்பு முகாம் மற்றும் கடன் மேளா நடக்கிறது.
வைப்புகளுக்கு,7.25 சதவீதம் வட்டியும், அதிகபட்ச வைப்புகளுக்கு, 8.10 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பினமாக அனைத்து வித வைப்புகளுக்கும் கூடுதலாக, 0.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
தவிர, வீட்டு வசதிக்கடன், அடமானக் கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன், சுய உதவிக்குழுக்களுக்கு கடன், வாகன கடன், கல்விக்கடன் என ஏராளமான கடன்கள் வழங்கப்படுகின்றன.
தீவிர வைப்பு சேகரிப்பு முகாம், கடன் மேளா உட்பட கடன் வசதிகளை, வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.