/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப் பன்றி வேட்டையாடும் விதிகளை தளர்த்த வலியுறுத்தல்
/
காட்டுப் பன்றி வேட்டையாடும் விதிகளை தளர்த்த வலியுறுத்தல்
காட்டுப் பன்றி வேட்டையாடும் விதிகளை தளர்த்த வலியுறுத்தல்
காட்டுப் பன்றி வேட்டையாடும் விதிகளை தளர்த்த வலியுறுத்தல்
ADDED : மார் 05, 2025 10:44 PM

பெ.நா.பாளையம்; காட்டு பன்றிகளை வேட்டையாட நிர்ணயிக்கப்பட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என, விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமம் மடத்தூரில் அமைக்கப்பட்ட பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், அங்கக வேளாண்மை விவசாயிகள் தொகுப்பில், அங்கக வேளாண்மையின் கீழ் காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் தென்னை சாகுபடி செய்வதோடு, ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் ஆகியவற்றை கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டார்.
அப்போது விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு, ''வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் வரும் காட்டு பன்றிகளை மட்டுமே வேட்டையாட முடியும் என்ற விதி இருப்பதால், சின்னதடாகம் வட்டாரத்தில், வனப்பகுதி வேளாண் நிலங்களுக்கு நெருக்கமாக உள்ள இடங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை வேட்டையாட முடியாத நிலை உள்ளது.
இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ.,க்குள் இருக்கும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாட விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் பவன்குமார் கூறினார்.