/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்து காணப்படும் நீரோடை சுத்தம் ஆகுமா?
/
புதர் சூழ்ந்து காணப்படும் நீரோடை சுத்தம் ஆகுமா?
ADDED : ஏப் 08, 2024 02:01 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில், புதர் சூழ்ந்த நீரோடையை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இப்பகுதியில் வடசித்துார் செல்லும் வழித்தடத்தில் கொண்டம்பட்டிக்கு உட்பட்ட பகுதியில் நீரோடை உள்ளது.
இவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்களில் சிலர், இந்த நீரோடையில் குப்பையை வீசி செல்கின்றனர். மேலும், நீரோடை முழுவதும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது.
தற்போது, கோடை வெயிலாக இருப்பதால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதர் மற்றும் குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த நீரோடையை சுத்தம் செய்யும் பட்சத்தில், கோடை மழை நீரை சேகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த எதுவாக இருக்கும், என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

