UPDATED : அக் 13, 2026 05:20 PM
ADDED : அக் 13, 2026 05:16 PM
அ நிறம் | அளவு
கோவை: புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்க, வரும் 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயிற்சி தலைமை இயக்ககம் (டி.ஜி.டி.,), இதற்கான இணையதளத்தை திறந்துள்ளது.
புதிய ஐ.டி.ஐ.,க்கள் துவங்குவதற்கும், ஏற்கனவே உள்ள ஐ.டி.ஐ.,களில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் அலகுகளை சேர்ப்பதற்கும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான இணையதளம் 31ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்பதால் தகுதியுள்ள நிறுவனங்கள், https://affiliation-dgt.skillindiadigital.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
