/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் பார்க்கிங் பகுதியான பஸ் ஸ்டாண்ட்: பயணியர் அதிருப்தி
/
கார் பார்க்கிங் பகுதியான பஸ் ஸ்டாண்ட்: பயணியர் அதிருப்தி
கார் பார்க்கிங் பகுதியான பஸ் ஸ்டாண்ட்: பயணியர் அதிருப்தி
கார் பார்க்கிங் பகுதியான பஸ் ஸ்டாண்ட்: பயணியர் அதிருப்தி
ADDED : ஆக 24, 2024 01:59 AM

வால்பாறை;வால்பாறை பஸ் ஸ்டாண்ட் கார் பார்க்கிங் பகுதியாக மாறி வருவதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில், நல்லகாத்து பாலம் அருகில், 16 ஆண்டுகளுக்கு முன், அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதனையடுத்து, பஸ் ஸ்டாண்டில் இருந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே, நகர் பகுதியில் இருந்து தொலைவில் இருப்பதாக கூறி, காந்திசிலை வளாகத்தை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றினர்.
இதனையடுத்து, வெளியூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்தும், எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமரும் வகையில் இருக்கை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதை தவிர்த்தனர். இதனால், வெளியூர் செல்வோர் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் பல மணி நேரம் காத்திருந்து, பயணம் செய்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால், சமீப காலமாக பஸ் ஸ்டாண்ட் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பஸ் ஸ்டாண்ட் தாழ்வான பகுதியில் இருப்பதால், மழை காலகத்தில் தண்ணீர் தேங்கி, பயணியர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பயணியர் நலன் கருதி, அரசு போக்குவரத்துக்கழக நுழைவுவாயிலில் பஸ் நிறுத்தி, ஏற்றி செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.