sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.எம்.சி.எச்.,ல் இருதய பரிசோதனை முகாம்

/

கே.எம்.சி.எச்.,ல் இருதய பரிசோதனை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் இருதய பரிசோதனை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் இருதய பரிசோதனை முகாம்


ADDED : ஆக 29, 2024 10:49 PM

Google News

ADDED : ஆக 29, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கே.எம்.சி.எச்., மையங்களில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம் செப்., 2 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சையை சலுகை கட்டணத்தில் பெறலாம்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்த்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இருதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.

40 வயதுக்கு மேல் மாரடைப்பு வருவது பொதுவாக உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., ரத்தத்தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், டிஎம்டி, எக்கோ ஆகிய பரிசோதனைகள் வாயிலாக இருதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறியலாம். தேவையான சிகிச்சை அளித்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக, அடைப்புகள் நீக்கப்படும்.

தினமும் யோகா, தியானம், குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி, புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல், தினமும் குறைந்தது 7 மணி நேரம் துாக்கம், அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொண்டால் இருதயத்தை பாதுகாத்து கொள்ளலாம்.

கே.எம்.சி.எச்.,ல் சிறப்பு இருதய பரிசோதனை முகாம் செப்., 2 முதல் 30ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. இதில், சர்க்கரை, கொழுப்பு சத்து, ஈ.சி.ஜி., எக்கோ/டிஎம்டி பரிசோதனைகள் ரூ.1,299க்கு மேற்கொள்ளப்படுகிறது; மருத்துவர் ஆலோசனை இலவசம்.

மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளலாம். இம்முகாம், அவிநாசி ரோடு மற்றும் கோவில்பாளையத்தில் உள்ள கே.எம்.சி.எச்., கோவை ராம்நகர் கே.எம்.சி.எச்., சிட்டி சென்டர், சூலுாரில் உள்ள கே.எம்.சி.எச்., மல்டிஸ்பெஷாலிட்டி மற்றும் ஈரோடு கே.எம்.சி.எச்.,ல் நடக்கிறது.

முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us