/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவமலை ரோட்டில் கால்நடைகள் : வாகன ஓட்டுநர்கள் அவதி
/
நவமலை ரோட்டில் கால்நடைகள் : வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூன் 30, 2024 10:54 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வனப்பகுதி மற்றும் வால்பாறை செல்லும் ரோடுகளில், தனிநபர்கள் வளர்க்கும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில், நவமலை, வால்பாறை ரோடுகள் உள்ளன. வால்பாறை ரோட்டில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், தனிநபர்கள் சிலர் வளர்க்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அணை மற்றும் வனப்பகுதியில் விடுகின்றனர். இவை, நவமலை ரோட்டில் சுதந்திரமாக சுற்றி வருவதால் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில், வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தனிநபர்கள் சிலர், வளர்க்கும் எருமை, மாடுகள் மற்றும் கால்நடைகளை அணை மற்றும் வனப்பகுதியையொட்டி மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இவை வனப்பகுதியில் மேய்வதால், மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு கிடைக்காத சூழல் ஏற்படும்.
மேலும், இவை கூட்டம், கூட்டமாக நவமலை மற்றும் வால்பாறை ரோட்டில் வலம் வருகின்றன. இதனால், வாகனங்கள் வரும் போது, அவை ரோட்டை கடந்து செல்லும் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள சூழலில், வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, அணை மற்றும் வனப்பகுதியில் தனியார் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.