ADDED : ஜூன் 05, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
காரமடை: சத்குருவின் ‘மண் காப்போம் காவேரி கூக்குரல் இயக்கம்’ வாயிலாக, நடப்பாண்டு 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நேற்று காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளியில் மரம் நடும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி பேராசிரியர் பார்த்திபன், பள்ளி தாளாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். பேராசிரியர் பார்த்திபன் பேசுகையில், ‘ஈசாவுடன் பள்ளி நிர்வாகம் இணைந்து, மரம் நடு விழா கொண்டாடப்பட்டது. மரம் சார்ந்த விவசாயம், பஞ்ச பூதங்களை பாதுகாக்கும்,’’ என்றார். பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. காவேரி கூக்குரல் ஒருங்கிணைப்பாளர்கள் உண்ணிகிருஷ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
