/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடசித்துார் பள்ளியில் நூற்றாண்டு விழா
/
வடசித்துார் பள்ளியில் நூற்றாண்டு விழா
ADDED : மார் 07, 2025 10:41 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழா நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி தலைமை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் பொள்ளாச்சி தங்கராசு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நூற்றாண்டு சுடர் மற்றும் தொடர் ஓட்டம் நடந்தது. மற்றும் நூற்றாண்டு ஜோதி ஏற்றும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.