/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜி., கல்லுாரிகளிடையே 'சென்டீஸ்' போட்டி; தடகளத்தில் தடம் பதித்த மாணவ, மாணவியர்
/
இன்ஜி., கல்லுாரிகளிடையே 'சென்டீஸ்' போட்டி; தடகளத்தில் தடம் பதித்த மாணவ, மாணவியர்
இன்ஜி., கல்லுாரிகளிடையே 'சென்டீஸ்' போட்டி; தடகளத்தில் தடம் பதித்த மாணவ, மாணவியர்
இன்ஜி., கல்லுாரிகளிடையே 'சென்டீஸ்' போட்டி; தடகளத்தில் தடம் பதித்த மாணவ, மாணவியர்
ADDED : மார் 11, 2025 11:49 PM

கோவை; சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த 'சென்டீஸ்' தடகள போட்டியில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் முழுத் திறமையை வெளிப்படுத்தினர்.
அவிநாசி ரோடு, சி.ஐ.டி., கல்லுாரியில் 'சென்டீஸ்' தடகள போட்டிகள் நடந்தன. இதில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 100 மீ., 400 மீ., 800 மீ., நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளை சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி துவக்கிவைத்தார்.
மாணவர்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் கே.சி.டி., மாணவர் ஹாஸ்விக் வின்சென்ட், கொங்கு இன்ஜி., கல்லுாரி மாணவர் கோகுல், எஸ்.என்.எஸ்., மாணவர் ஸ்ரீதர் ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
பெண்கள் பிரிவில், சி.ஐ.டி., கல்லுாரி சாலினி, கொங்கு கல்லுாரி கவுசல்யா, குமரகுரு கல்லுாரி சைனி ஆகியோரும், மாணவர்களுக்கான, 5,000 மீ., ஓட்டத்தில் குமரகுரு கல்லுாரி விக்னேஷ்வரன், கொங்கு கல்லுாரி லீ ரங்கவானி, எஸ்.என்.எஸ்., கல்லுாரி நவீன்குமார் ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மாணவியர் பிரிவில், எஸ்.எஸ்.ஐ.இ.டி., தரணி பிரியா, சி.ஐ.டி., வர்ஷா, ஜி.சி.டி., பாலா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மாணவர்கள் பிரிவில், கொங்கு இன்ஜி., கல்லுாரியும், கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியும் தலா, 39 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
மாணவியர் பிரிவில், கொங்கு இன்ஜி., கல்லுாரி, 30 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது. 28 புள்ளிகளுடன், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.