/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவியல் முறைகளில் மாற்றம் ;வேளாண் துறை அறிவுறுத்தல்
/
உழவியல் முறைகளில் மாற்றம் ;வேளாண் துறை அறிவுறுத்தல்
உழவியல் முறைகளில் மாற்றம் ;வேளாண் துறை அறிவுறுத்தல்
உழவியல் முறைகளில் மாற்றம் ;வேளாண் துறை அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 10, 2024 11:24 PM
சூலூர்:'உழவியல் முறைகளில் மாற்றம் கொண்டு வந்தால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்,'என, வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
உழவியல் முறைகள் குறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:
உழவியல் முறையில் மாற்றம் கொண்டு வரும்போது, பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். குறைந்த நீரை கொண்டு குறைந்த நாட்களில் லாபம் தரக்கூடிய பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, காராமணி மற்றும் சிறு தானியங்களை பயிரிடலாம். வறட்சியை தாங்க கூடிய உயர் விளைச்சல் ரகங்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டும்.
வறட்சியை தாங்கும் பொருட்டு விதைகளை கெட்டிப்படுத்த வேண்டும். சோளவிதைகளை, 10 சதவீதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் அரை மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்கு பின் விதைக்கலாம். விதைப்பின் போது போதிய ஈரம் இல்லை யென்றாலும் அடுத்த மழை பெய்யும் போது, பயிர்கள் ஒரே சீராக வளரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

