ADDED : ஆக 02, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
கோவை: கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்ஜினியரிங் வேலைகள் நடப்பதால், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவையில் இருந்து ஆக. 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29 மற்றும் செப்.1,2ம் தேதிகளில் காலை 8:00க்கு புறப்படும் ரயில் போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் சென்றடையும். வழக்கமாக இயக்கப்படும் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர், திருப்பூர் வழித்தடத்தில் செல்லாது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
