ADDED : ஜூலை 08, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
கோவை: கரூர் ரயில்வே பணிமனையில் வேலை நடப்பதால் கோவை வழி பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ்(16844) இயக்கத்தில் இன்று மாற்றம் செய்யப்படுகிறது. பாலக்காடு டவுனில் இருந்து காலை 6:30க்கு புறப்படும் ரயில் கரூர் ஸ்டேஷனில் சில மணி நேரம் நிறுத்தி இயக்கப்படுகிறது.
பணிகள் முடிந்தவுடன் இந்த ரயில், கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. அதேபோல், கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) கோவையில் இருந்து காலை 8:00க்கு புறப்பட்டு போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகிறது.
வழக்கமாக இயக்கப்படும் வடகோவை, திருப்பூர், கரூர், ஈரோடு வழியாக இந்த ரயில் செல்லாது என, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
