ADDED : ஜூலை 14, 2026 08:11 PM
அன்னூர்: அன்னூரில், பா.ஜ., நிர்வாகிகளுக்கு பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
பா.ஜ.,வில் மாவட்ட, ஒன்றிய மற்றும் சக்தி கேந்திர நிர்வாகிகளுக்கு ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் ஒன்றியம் வாரியாக நடைபெற்று வருகிறது.
அன்னூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கு, அன்னூர் கஸ்தூரி ஹாலில் ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமை பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து துவக்கி வைத்து பேசினார்.
அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் சத்தியமூர்த்தி பேசுகையில், நிர்வாகிகள் பொதுமக்களின் குறைகளை, கோரிக்கைகளை கேட்க வேண்டும். கட்சி தொண்டர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், என்றார்.
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் மந்திராசலம்,ஒன்றிய தலைவர்கள் ரத்தினசாமி, ஆனந்தன், வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
