ADDED : ஆக 03, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கடந்தாண்டு இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று சென்னை புழல் சிறைக்கு சென்று, அவரை கைது செய்ததற்கான ஆவணங்களை காட்டி, பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர்.
ஜே. எம்.4. மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சரவணபாபு உத்தரவிட்டார். போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.