/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'செக்போஸ்ட் 24' சைபர் பாதுகாப்பு மாநாடு; சி.ஐ.ஐ., சார்பில் கோவையில் நடந்தது
/
'செக்போஸ்ட் 24' சைபர் பாதுகாப்பு மாநாடு; சி.ஐ.ஐ., சார்பில் கோவையில் நடந்தது
'செக்போஸ்ட் 24' சைபர் பாதுகாப்பு மாநாடு; சி.ஐ.ஐ., சார்பில் கோவையில் நடந்தது
'செக்போஸ்ட் 24' சைபர் பாதுகாப்பு மாநாடு; சி.ஐ.ஐ., சார்பில் கோவையில் நடந்தது
ADDED : ஆக 14, 2024 09:05 PM
கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டலம் சார்பில், 2வது சைபர் பாதுகாப்பு மாநாடு, கோவையில் நடந்தது.
'செக்போஸ்ட் 24' என்ற தலைப்பிலான இந்த மாநாட்டில், உலகளாவிய போட்டியைச் சமாளிக்க சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி, கோவை தொழிலமைப்புகளுக்கு உந்துதலை வழங்கும் வகையில், 'பாதுகாப்பு, அப்பால், ஒருங்கமைவு' என்ற கருப்பொருளில் விவாதிக்கப்பட்டது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்.டி.பி.ஐ., நிறுவன இயக்குநர் சஞ்சய் தியாகி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
இணையதள யுகத்தின் அசுர வளர்ச்சி, இந்தியாவின் டிஜிட்டல் துறையில் பெருந்தாவல் குறித்துப் பேசிய அவர், அதே சமயம், சைபர் பாதுகாப்பில் உள்ள பெருகிவரும் அபாயங்கள் குறித்து எச்சரித்தார்.
மென்பொருள் சேவைத் துறையின் (சாஸ்), தலைநகரமாக தமிழகம் இருப்பதைக் குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் பாதுகாப்பு சட்ட வரைவு 2023ன் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினார்.
வேலியன்ட் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ராம சுப்பிரமணியம், இகேப்ஸ் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன இயக்குநர் குணசேகரன், இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை துணைத் தலைவர் ராஜேஷ் துரைசாமி, நெக்டான் டெக்னாலஜிஸ் மேலாண் இயக்குநர் மகாலிங்கம் ராமசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஒரு நாள் கருத்தரங்கில், நாடு முழுவதும் இருந்து உற்பத்தி மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குநர்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.