/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரைகளுடன் சென்னை சகோதரர்கள் கைது
/
போதை மாத்திரைகளுடன் சென்னை சகோதரர்கள் கைது
ADDED : ஆக 17, 2024 11:49 PM
கோவை:காந்திபுரம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பிடிபட்ட சகோதரர்கள் இருவர், சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே, காட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். மாலை, 4:00 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, டூ வீலர் ஸ்டாண்ட் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, சென்னையை சேர்ந்த 16 மற்றும், 17 வயது மதிக்கத்தக்க சகோதரர்கள்இருவரை, பிடித்து விசாரித்தனர்.
கோவையில் 'வெல்டிங்' பணிசெய்துவரும் இவர்கள், விற்பனைக்காக 120 போதை மாத்திரைகள் வைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது. இருவரும் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் உள்ள, சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.