/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
ADDED : மார் 04, 2025 06:19 AM

வால்பாறை; வால்பாறையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி.மு.க., அவைத்தலைவர் செல்லமுத்து தலைமையில் நடந்தது. விழாவையொட்டி கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, மாவட்ட துணைத்தலைவர் ஈகாபொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதி டென்சிங் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி சார்பில் நடந்த விழாவில், கிளை மேலாளர் அன்பழகன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், சிந்தாமணி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச., சார்பிலும், பல்வேறு எஸ்டேட் பகுதியிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.