/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையம் கட்ட இடம் தேர்வு
/
சுகாதார நிலையம் கட்ட இடம் தேர்வு
ADDED : செப் 09, 2024 09:43 AM
சூலுார்: செஞ்சேரியில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கின.
செஞ்சேரியில் உள்ள துணை சுகாதார நிலையம்,1989ம் ஆண்டு கட்டப்பட்டது. 35 ஆண்டுகள் ஆனதால், கட்டடம் பழுதடைந்தது பயன்படுத்த முடியாமல் இருந்தது. சமீபத்தில் அக்கட்டடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து, அதே பகுதியில் புதிய கட்டடம் கட்ட, இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. கட்டடம் கட்ட, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து சென்ட்டில் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.