/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகர போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் வரும் 21ம் தேதி ஏலம்
/
மாநகர போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் வரும் 21ம் தேதி ஏலம்
மாநகர போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் வரும் 21ம் தேதி ஏலம்
மாநகர போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் வரும் 21ம் தேதி ஏலம்
ADDED : ஆக 06, 2024 06:59 AM
கோவை: மாநகர போலீசாரின் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் வரும், 21ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.
மாநகர போலீசார் பயன்படுத்திய ஏழு நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இரு சக்கர வாகனம் என, எட்டு வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் வரும், 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
இந்த வாகனங்களை, மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் 18ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் வரும், 20ம் தேதி மாலை, 5:00 மணி வரை ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம்.
நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 மற்றும் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1,000 முன்பணம் செலுத்தி, ஏலம் எடுப்பவர் பெயரை பதிவு செய்ய வேண்டும். ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 18 சதவீதமும், இரு சக்கர வாகனங்களுக்கு, 12 சதவீதமும் ஜி.எஸ்.டி., செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, 0422 2241795 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.